search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா பட்ஜெட்"

    பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaBudget
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று பொது பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

    மேலும், பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அவர் அறிவித்தார். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளுக்கும் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது ரூ.34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தால் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக பிரச்சாரத்தின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

    ஆனால், குமாரசாமி தான் அளித்த வாக்குறுதியின்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி வந்தது.  இதற்கு பதில் அளித்த குமாரசாமி, தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருவதால், விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    கர்நாடக சட்டசபையில் அடுத்த மாதம் ஜூலை 5-ந்தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும். #KarnatakaBudget #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு மந்திரி கிருஷ்ணபைரே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்குகிறது.



    முதல் நாளில் கவர்னர் வி.ஆர். வாலா உரையாற்றுகிறார். முதல்-மந்திரியும், நிதித்துறையை கூடுதலாக கவனிப்பவருமான குமாரசாமி ஜூலை 5-ந் தேதி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaBudget #Kumaraswamy
     
    ×